logo

Division of Event                         : Sports

Date                                               : 11-10-2022

Title of the Event                    :  Inter Collegiate Meet  – Volleyball

Time                                         : 09.00 a.m. to 4.00 p.m.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ‘ பி ‘ மண்டல கைப்பந்து போட்டி இன்று 11-10-2022 திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ‘ பி ‘ மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை விவேகானந்த கல்லூரி உடற்பியிற்சி இயக்குனர் முனைவர் சீனி முருகன் ஒருங்கிணைத்தார். மேலும் போட்டியை விவேகானந்தர் கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவேகானந்த கல்லூரி, மதுரை கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, நாகரத்தினம் அங்காளம்மாள் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கைப்பந்து போட்டியில் பங்கு பெற்றனர். அதுபோல் அந்தந்த கல்லூரி உடற்கல்வி இயக்குனர்களும் பங்கு பெற்றனர். இதில் முதல் இடத்தை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியும் இரண்டாவது இடத்தை விவேகானந்தா கல்லூரியும் பெற்றது. வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு விவேகானந்த கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்